ராஜஸ்தான் ஜுன்ஜுனு பகுதியில் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் சுரங்கம் இயங்கி வருகின்றது. நேற்று இரவு சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2000 அடி ஆழத்தில் சிக்கி இருக்கும் லிப்ட்டுக்குள் 14 பேருக்கு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.