இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1960.30 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.30.50 குறைந்து ரூ.1,930 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் வீடுகளில் உபயோகிக்கப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.