அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தற்போது வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதாவது கரூரில் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பினாமி தடுப்பு சட்டத்தின் கேள்வி விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வருகிற 23ஆம் தேதி அவருடைய வழக்கறிஞர் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் காணொளி மூலம் நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நேரில் ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது தற்போது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.