கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 66 பேர் உயிரிழந்த நிலையில் இந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதால் அரசு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் இன்னும் அடங்காத நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இடைத்தேர்தல் நடைபெற்று வரும் விக்கிரவாண்டி அருகே பூரி குடிசை கிராமத்தில் சாராயம் குடிக்க 11 பேர் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வரப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.