டெல்லியில் உள்ள பிரசாந்த் விஹார் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியில் இருக்கும் இனிப்பு கடை அருகே குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சிஆர்பிஎஃப் பள்ளியின் சுவர்கள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.