
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை போன்றவைகள் நிர்ணயிக்கப்படும். கடந்த சில மாதங்களாகவே வர்த்தக சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்து வரும் நிலையில் இந்த மாதம் விலை குறைந்தது. அதே சமயத்தில் கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
ஆனால் நேற்று மத்திய அரசு 50 ரூபாய் வரையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையின் விலையை உயர்த்தியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் இந்த நிலையில் நேற்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் அந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.