அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 9.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.