குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் உள்ள கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தமிழர்கள் உட்பட இந்தியாவை சேர்ந்த பலர் தங்கி இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் இதுவரை 53 பேர் பலியானதாகவும் அதில் இரண்டு தமிழர்கள் உட்பட 40 பேர் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.  தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தொழிலதிபர் ஆபிரகாமை உடனடியாக கைது செய்ய குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது.