சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட 5 கொத்தடிமைகளை போலீசார் மீட்டனர்.  வளசரவாக்கம் திருப்பதி நகரில் ரஷிதா என்பவர் வீட்டில் இருந்த 5 பேரை போலீசார் மீட்டனர். ரேஷ்மா என்ற பெண் 6 வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்சம், 17 வயது சிறுமி 3 வருடங்கள் பணிபுரிய ரூ.3 லட்சம் முன்பணம் கொடுத்ததாக தகவல் வெளியானது.