சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 66,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9021 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,168 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 112 ரூபாய்க்கும்,ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.