சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 60 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 7540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 8,225 ரூபாய்க்கும் ஒரு சவரன் 65,800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 104 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1,04,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.