தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் திமுக அரசின் ஆக்கபூர்வமான திட்டங்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்திலும் தொடரும் என்று சட்டசபையில் நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை 15 ஆம் தேதி என்பதால் மகளிர் உரிமைத்தொகை பணம் வரும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை தற்போது முதல்வர் விஜய் மறுத்துள்ளார்.

அதாவது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சீரமைக்க அரசுக்கு உரிய கால அவகாசம் வேண்டும் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். இதன் காரணமாக மே மாதத்திற்கான மகளிர்  உரிமை தொகையும் வங்கியில் வரவு வைக்கப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்தால் மாதம் 2500 ரூபாய் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்த நிலையில் இன்று தமிழக அரசின் நிதிநிலைமை குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 2026 மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை நாளை வரவு வைக்கப்படாது என்றாலும் விரைவில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.