தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். இந்தத் திட்டம் கடந்த மே 10-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் இதுவரை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பில் கையெழுத்திட்டார்.

புதிய அரசாணையின்படி, 200 யூனிட் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மின்சாரக் கட்டணம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.235 வரை மிச்சமாகும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

500 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்கான பழைய மற்றும் புதிய கட்டண விவரம் வருமாறு:

பயன்படுத்திய யூனிட் பழைய கட்டணம் (ரூ.) புதிய கட்டணம் (ரூ.) மிச்சமாகும் தொகை (ரூ.)
210 282 47 235
250 470 235 235
300 705 470 235
350 940 705 235
400 1,175 940 235
450 1,490 1,255 235
500 1,805 1,570 235

இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோடைக்காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் சூழலில், புதிய முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.