
குஜராத் மாநிலத்தில் உள்ள வதேரா மாவட்டத்தில் கம்பீரா பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி மற்றும் கார் கீழே உள்ள மாகி நதியில் விழுந்து மூழ்கியது. மற்றொரு வாகனம் பாலத்தில் தொங்கியபடி அப்படியே நின்றது. இந்நிலையில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் முதலில் 2 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்திற்கு முறையான பராமரிப்பு இல்லாததே காரணம் என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.
In Gujarat’s Vadodara, the Gambhira Bridge connecting Anand and Vadodara collapsed. Vehicles plunged into the river; casualties reported. Rescue ops underway, officials on site.@NewIndianXpress @santwana99 @jayanthjacob
#Vadodara #BridgeCollapse #Gujarat pic.twitter.com/0s7gYWX3Vg
— Dilip Kshatriya (@Kshatriyadilip) July 9, 2025