இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நிறைவடைந்த நிலையில் தற்போது மார்ச் 28ஆம் தேதி போட்டி நடைபெறும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி வெளியான பிறகு இரண்டாம் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெறும் நிலையில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதுகிறது. இதில் இந்தியா மூன்றாவது முறையாக உலக கோப்பையை ஜெயிச்சு வரலாற்றில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.