
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக இன்று காலை அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதற்காக கிணற்றில் இருந்த நீரை அகற்றி உள்ளே இறங்கி சோதனை மேற்கொண்டனர். இதில் கிணற்றில் இருந்தது மனித மலம் அல்ல தேனடை என்பது தெரியவந்தது.