ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூன் 1ஆம் தேதி என்பதால் சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 25 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சிலிண்டர் 1881 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.