
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியில் சாலையோர தெரு குழாயில் தண்ணீர் பிடித்த போது கார் மோதி 3 பெண்கள் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் முக்காணி பகுதியை சேர்ந்த சாந்தி, பார்வதி, அமராவதி மற்றும் சண்முகத்தாய் ஆகியோர் தண்ணீர் பிடித்த போது விபத்து ஏற்பட்ட நிலையில் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் சாலையோரம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயங்களுடன் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாததால் தான் விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் விபத்தில் உயிரிழந்த பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.