
கடலூர் மாவட்டத்தில் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரத்தில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவில் கூட்டாளிகளுடன் செல்வம் தலைமறைவாக இருந்த நிலையில் ஒரு மாத கால தேடலுக்குப் பிறகு அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் செல்வம் மற்றும் அவருடைய கூட்டாளிகளை தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் செல்வம் கடலூர் மாவட்ட விசிக பொருளாளராக இருந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரத்திற்கு பிறகு அவரை கட்சியிலிருந்து திருமாவளவன் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.