தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு கிளம்பிய போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 39 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் தற்போது ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இறந்தவர்களின் உடல் நலம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டிற்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிரிழப்பு சம்பவங்களை தொடர்ந்து தற்போது விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
