2024-25 பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது..

கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 315 இல் இருந்து ரூபாய் 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் கரும்பு விவசாயிகள் 5 கோடி பேர் பயன் பெறுவார்கள்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்ஓ) சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், கரும்புக்கான நியாயமான விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “கரும்புக்கான நியாயமான மற்றும் லாப விலையை உறுதி செய்வதற்காக, வரும் அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரையிலான காலக்கட்டத்தில் கரும்புப் பருவத்திற்கான விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகள், 2024-25ம் ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340 என நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு ரூ.315 ஆக இருந்தது, இந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.340 ஆக அதிகரித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் தாக்கூர்.

முக்கியமாக பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், ஹரியானா மற்றும் டெல்லியின் எல்லைகளுக்கு அருகே அனைத்து பயிர்களுக்கும் MSP க்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தைக் கோரி போராட்டம் நடத்தி வரும் நேரத்தில் அரசாங்கத்தின் இந்த முடிவு வந்துள்ளது. விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் புதிய பேச்சுவார்த்தைகளை நடத்தியது, ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.