காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வருமான வரி நிலுவை 65 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி நிலுவைக்காக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் 115 கோடியை ஐடி முடக்கியிருந்தது. முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்த 115 கோடியிலிருந்து 65 கோடி ஐடி கணக்கிட்டு மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருமானவரித்துறை சட்ட விரோதமாக தங்கள் கணக்கில் இருந்து 65 கோடியை எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வங்கி கணக்குகளில் இருந்து வருமான வரித்துறை சட்ட விரோதமாக ரூபாய் 65 கோடி எடுத்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.. புதுடெல்லி பேங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 250 கோடி முடக்கப்பட்ட விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில் சட்ட விரோதமாக ரூபாய் 65 கோடி எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.