
இந்திய அணியின் வில்வித்தை பயிற்சிளர் பேக் வூங் கி. இவர் ஒலிம்பிக் போட்டிக்காக பாரீஸ் சென்றுள்ள நிலையில் அவரை இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வருமாறு இந்தியா வில் வித்தை சங்கம் அறிவித்துள்ளது. அதாவது அவர் பாரிசில் தங்குவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் வழங்காததால் அவர் அங்கு தங்க முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்திய வில் வித்தை சங்கம் அவரை திரும்ப அழைத்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு அங்க தங்க அனுமதி கிடைக்காதது தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானம் என்று வில்வித்தை பயிற்சியாளர் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதால் இனி இந்தியா வர விருப்பமில்லை என்றும் சொந்த நாடான தாய் நாட்டிற்கு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவருடைய பதவிக்காலம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முடிவடையும் நிலையில் இனி அந்த பதவியை தொடர மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.