சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று மாலை மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி தற்போது 880 வரையில் அதிகரித்துள்ளது. இதனால் ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 72840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஒரு கிராம் 9060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,11,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.