இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி அரசு அதிகாரிகளுக்கு 2100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்துள்ள நிலையில் நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொளலியாக தற்போது அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை கண்டு வருகிறது. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்டு, அதானி எனர்ஜி மற்றும் அதானி பவர் நிறுவனங்களின் பங்குகள் 10 சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்துள்ளது.

இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 668 புள்ளிகள் சரிந்து 76909 புள்ளிகளுக்கு, நிஃப்டி 213 புள்ளிகள் சரிந்து 23,304 புள்ளிகளுக்கும் வர்த்தகமாகிறது. இந்நிலையில் அதானி பங்குகளின் விலை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் தற்போது ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.