ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு முதல் பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அந்த தாக்குதலை இந்தியா தொடர்ந்து முறியடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுவதால் அச்சுறுத்தல் காரணமாக நேற்று ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இனிவரும் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என பிசிசிஐ துணை தலைவர் கூறினார்.

தற்போது சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டி நடத்தினால் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக சேப்பாக்கம் மைதானம் மீது தாக்குதல் நடத்தப்படும் என இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் எனவும் இமெயிலில் குறிப்பிட்டுள்ளனர்.