டெல்லியில் உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென ஐஏஎஸ் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இங்கு வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதாவது வெள்ளநீர் புகுந்த போது 30 மாணவர்கள் அங்கிருந்ததாக கூறப்படும் நிலையில்  அவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பயிற்சி தளத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவிகள், ஒரு மாணவர் உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.