
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே. இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் தற்போது நமல் ராஜபக்சே தான் குற்றவாளி என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய முதலீட்டிலிருந்து வந்த பணத்தை முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கொழும்பில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நமல் ராஜபக்சேதான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சமீபத்தில் மஹிந்த ராஜபக்சே மீது இளைய மகன் யோக்ஷித ராஜபக்சே சட்ட விரோதமாக சொத்து வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.