உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணியானது கோப்பையை வென்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469, இந்தியா 296 ரன்கள் எடுத்தது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 270 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 2-வது இன்னிங்சில் ஆடிய இந்தியா 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது.