ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.இந்த தொகுதியில் ஈவெரா திருமகன் வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் இவரும் கடந்த வருடம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வந்த நிலையில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி என்பது உருவானது. பிற கட்சிகள் போட்டியிடவில்லை.

அதன்படி திமுக வேட்பாளராக விசி சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமியும் போட்டியிட்ட நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 10 சுற்று முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 11-ஆம்  சுற்று முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் திமுக கட்சியின் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில் அவர் 76,278  வாக்குகள் பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 16,547  வாக்குகள் பெற்றுள்ளார். இதனால் 59,731 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.  இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெற்று சந்திரகுமார் வெற்றியை உறுதி செய்துள்ளார்.