
ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 98-9128109115, 98-9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரக அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம். ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.