தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் பொறுப்பேற்ற நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பொது நூலகத்துறை இயக்குனராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமித்துள்ளார்.

அதன் பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ் முதல்வர் ஸ்டாலின் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்ற நிலையில் முதல் உத்தரவாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை மாற்றி அறிவித்துள்ளார்.