
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தற்போது கரூர் மற்றும் கோவையில் முகாமிட்டு 2026 ஆம் ஆண்டு அரசியல் களப்பணிகளை தீவிர படுத்தியுள்ளார். சமீப காலமாக மாற்றுக் கட்சியினரை திமுகவில் இணைக்கும் வேலைகளில் செந்தில் பாலாஜி ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் பாஜக, அதிமுக, தவெக, அதிமுக மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் செந்தில் பாலாஜி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்துள்ளனர். அதன்படி இன்று கரூர் பஞ்சமாதேவி பகுதியில் அதிமுக கிளை அவை தலைவர் முருகேசன் உட்பட அதிமுகவினர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். மேலும் இது எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் ஆகியோருக்கு அதிர்ச்சியை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.