சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 5360 ரூபாய் வரையில் குறைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 2240 ரூபாய் வரையில் குறைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விலை குறைந்துள்ளது. அதன்படி தற்போது மீண்டும் 5320 வரையில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 12960 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. மேலும் இதன் காரணமாக தற்போது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,06,620 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,340 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
