தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை கட்டுப்பாட்டில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் இயங்குகிறது. இதற்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது அவர்கள் கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. அதன்படி 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அலுவலக உதவியாளர்கள் முதல் தலைமை பொது மேலாளர் வரை 10 நிலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு வீட்டு வாடகை படி மற்றும் நகர ஈட்டுபடியையும் அரசு உயர்த்தியுள்ளது. மேலும் இந்த ஊதிய உயர்வு 2023 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.