மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் என்ற பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அரசியல் கட்சியினர் பட்ஜெட் குறித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி கூறியதாவது, மத்திய பட்ஜெட் அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். இந்த பட்ஜெட் மக்களின் சேமிப்பையும், முதலீட்டையும், நுகர்வையும் அதிகரிக்கும். மக்களுக்கான இந்த பட்ஜெட் அனைவரையும் சென்றடையும், நிதியமைச்சர் மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.