
தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, வெளிப்படைத்தன்மையான தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் நடத்தை விதி 93(2) (அ)-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியின் சிசிடிவி பதிவுகளை வழங்க பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிசிடிவி பதிவு தேர்தல் ஆவணங்களை பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது என கூறியுள்ளார்.