ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் விறுவிறுப்பாக இன்று மாலை 3:30 மணியளவில் இருந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆஸி. வீரர்கள் பலரும் நல்ல விலைக்கு ஏலத்தில் விற்பனையாகிறார்கள்.

அதன்படி ஆஸ்திரேலியா வீரர்கள் மார்கஸ் ஸ்டோயினஸை 11 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும், மிட்செல் மார்ஷை 3.40 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியும், கிளென் மேக்ஸ்வெலை 4.2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜோஷ் ஹேஷில்வுட்டை 12.50 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.