ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த இயக்குநர் தீபக் பிரசாத் கைது செய்யப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். சென்னை அசோக் நகரில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். மக்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் ஆருத்ரா. இதில் இன்னும் பலர் தலை மறைவாக உள்ளனர்.