சூரிய மின் தகடு அமைக்கும் திட்டம் மூலமாக ஆண்டுக்கு 18000 ரூபாய் சேமிக்கலாம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சூரிய மின் தகடு மூலம் கூடுதலாக கிடைக்கும் ஆற்றலை அரசிடம் விற்கலாம். அதனைப் போலவே மின் வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று கூறிய அவர் வீட்டின் மேற்குரையில் சூரிய தகடுகள் அமைப்பதன் மூலமாக தொழில் முனைவோர் மற்றும் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.