ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். அதிமுக சார்பாக தென்னரசு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் என மொத்தம் 77 பேர் தேர்தலில் களம் இறங்குகின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடியில் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மை அழிவதால் அதிகமாக கள்ள ஓட்டுக்கள் போட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டை உள்ளனர். இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் வாக்குச்சாவடிகளில் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.