தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் 5366 கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன்படி 11 மாதங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் இவர்களுக்கு பணி நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 5326 கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.