
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வரும் நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய மருத்துவ காப்பீட்டின் மூலமாக அரசு மருத்துவமனைகளில் 5 லட்சம் ரூபாய் முதல் சில நோய்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.