தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான TVH கட்டுமான நிறுவனத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கிட்டத்தட்ட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதே போன்று பெரம்பலூர் தொகுதி எம்பியும் அமைச்சர் நேருவின் மகனுமான அருண்  நேரு வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடையாறு, தேனாம்பேட்டை, எம்ஆர்சி நகர், சிஐடி காலனி போன்ற பகுதிகளில் காலை முதல் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.