பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி. 10 தொகுதிகளில் காஞ்சிபுரம் தவிர்த்து 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாமக.

அதன்படி அரக்கோணம் – பாலு, கடலூர் – தங்கர் பச்சான், திண்டுக்கல் – திலகபாமா, ஆரணி – கணேஷ் குமார், மயிலாடுதுறை- ம.க. ஸ்டாலின், கள்ளக்குறிச்சி – தேவதாஸ், தர்மபுரி – அரசாங்கம், சேலம் -அண்ணாதுரை, விழுப்புரம் – முரளி சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை.