அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இபிஎஸ்-க்கு சாதகமாக உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு நடைமுறைகள் அனைத்து செல்லும் என்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.