அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக பிசிசிஐ ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் நிலையில் ஆர்டிஎம் என்ற முறையின் மூலம் கூடுதலாக ஒரு வீரரை தக்க வைத்துக் கொள்ளலாம். அதாவது ஒரு அணியில் இருந்து விடுவிக்கப்படும் வீரரை மற்றொரு அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கும் பட்சத்தில் ஆர்டிஎம் என்ற முறையினை பயன்படுத்தி அந்த தொகையை கொடுத்து அந்த வீரரை மீண்டும் அதே அணி தக்க வைத்துக்கொள்ளலாம்.

அதோடு அன் பேக்ட் பிளேயர் குறித்தும் அறிவித்தது. இந்த விதிமுறையின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் தோனியை சேர்க்கப்படாத வீரராக வைக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 வருடங்களான வீரர்கள். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் எம்.எஸ் தோனியை அன் பேக்ட் வீரராக தக்கவைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது UNCAPPED PLAYER ஆக தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்க வைத்துள்ளது. மேலும் 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே எம்.எஸ் தோனியை தக்க வைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.