ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்தில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டை ஒட்டி அவருடைய வீட்டில் கட்சி சார்பாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்தான் சந்திரபாபுவின் கூட்டத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். அந்த சோகம் நீங்கும் முன் அடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.