நாட்டில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் என்பது அதிகரித்து வருகிறது. இது குறித்த செய்திகள் கூட அடிக்கடி வெளியாகிறது. இந்த ரயில் விபத்துகளுக்கு சதி வேலை காரணமாக இருப்பதாக கூறப்பட்டாலும் விரிவான விசாரணைகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இன்று மீண்டும் ஒரு ரயில் விபத்து அரங்கேறியுள்ளது.

அதாவது மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஹவ்ரா அருகே நாக்பூரில் ஷாலிமார்-செகந்திராபாத் விரைவு ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.