தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை முதல் 6 நாட்களுக்கு விடுமுறை. இந்நிலையில் ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதால் தமிழக அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கியது.

இதைத்தொடர்ந்து தற்போது ஜனவரி 18ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்பிறகு ஜனவரி 20ஆம் தேதி சுபமுகூர்த்த தினம் என்பதால் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் கூடுதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.